சுவர் ஏறிய பிரபல ஹீரோயின்... பாவம் ஊரடங்கு நாட்கள் இவங்கள இப்படி மாத்திடுச்சாம்
முகப்பு > சினிமா செய்திகள்ஊரடங்கு உத்தரவு காரணமாக படப்பிடிப்புகள் எதுவும் இல்லாமல் பிரபலங்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து பிரபலங்கள் தங்களது குவாரண்டின் நாட்களை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்பதை அவ்வப்போது சமூக வலைதள பதிவுகளாக எழுதி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், குவாரண்டின் நாட்கள்ல என்ன பண்றீங்கனு மக்கள் கேட்கிறாங்க. நான் சுவர் ஏறிக்கிட்டு இருக்கேன். குவாரண்டின் இப்படி மாத்திடுச்சு என்றார்.
நடிகர் சிவாவின் 'தமிழ் படம் 2' படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். தற்போது ஹிப்ஹாப் தமிழாவுக்கு ஜோடியாக இவர் நடித்த 'நான் சிரித்தால்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
Tags : Ishwarya Menon, Quarantine, Lockdown, Coronavirus