Reliable Software
www.garudabazaar.com

பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்து கொள்ளும் குக் வித் கோமாளி பிரபலத்தின் மகள்.. செம வைரல் இப்போ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். இந்நிலையில் 106 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. கடந்த வருடம் உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வந்த நிலையில் கடுமையான ஊரடங்கினால் பிக்பாஸ் நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டது. பின்பு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக மீண்டும் திரும்பியது பிக்பாஸ். இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தடையில்லாமல் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நேர்த்தியான ஒழுங்குமுறைகள் மற்றும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு மிகவும் சிறப்பாக நடத்தி  முடிந்திருக்கிறது பிக்பாஸ் குழு.

cooku with comali fame daughter to enter biggboss பிக்பாஸ்ல் பிரபலத்தின் மகள்

இந்நிலையில் இந்த வருடத்திற்கான பிக்பாஸ் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆட்கள் தேர்வு தற்போது துரிதமாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஷகீலா தற்போது மிகவும் பிரபலம். தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை மம்மி என்று செல்லமாக அழைக்கின்றனர். அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. ஷகிலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் மிளா ஒரு திருநங்கை ஆவார். சினிமா துறையில் நடிகை மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார். இந்த சீசனில் மிளா நுழைய உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

cooku with comali fame daughter to enter biggboss பிக்பாஸ்ல் பிரபலத்தின் மகள்

Tags : Biggboss, Mila

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

cooku with comali fame daughter to enter biggboss பிக்பாஸ்ல் பிரபலத்தின் மகள்

People looking for online information on Biggboss, Mila will find this news story useful.