Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

சுந்தர்.சி உடன் ஹீரோயினாக நடிக்கும் பிரபல நடிகை.. படத்தில் பிக்பாஸ் நடிகையும் இருக்காங்களே.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் நகைச்சுவை பாணியில் இயக்கிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் இயக்குனரான சுந்தர்.சி கடைசியாக விஷால், தமன்னா நடித்த ஆக்ஷன் என்ற ஸ்பை திரில்லர் படத்தை இயக்கி இருந்தார்.  தற்போது இவர் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா, ராஷி கன்னா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதுமட்டுமின்றி, இவர் ஹீரோவாக நடித்தும் கலக்கி வருகிறார். அடுத்ததாக அவர் இயக்கி வரும் 'அரன்மணை 3' படத்தின் பர்ஸ்ட் லுக் சீக்கிரமே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய மேலும் விவரங்கள் எதிர்பார்த்திருக்கும் போது, நீங்கள் தவறவிட்ட மற்றொரு பெரிய செய்தி இங்கே உள்ளது.

popular biggboss actress joins sundar c film சுந்தர்.சி படத்தில் பிரபல நடிகை

ஆம், சிபிராஜ் நடிப்பில் உருவாகிய "கட்டப்பாவ காணோம்' என்ற படத்தின் இயக்குனர் மணி சேயன் இயக்கும் க்ரைம் டிராமா ஒன்றில் சுந்தர்.சி அடுத்து ஹீரோவாக நடிக்க உள்ளார்.இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் மற்றும் ஹேபா படேல் ஆகிய இரு கதாநாயகிகளும் நடிக்க இருக்கின்றனர். வி.ஆர்., டெல்லா பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் பிக் பாஸ் 3 புகழ் அபிராமி வெங்கடாச்சலம், கமல் காமராஜ், ஜெயக்குமார், முருகதாஸ், ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி இசையமைக்கும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

popular biggboss actress joins sundar c film சுந்தர்.சி படத்தில் பிரபல நடிகை

Tags : Sundar C

popular biggboss actress joins sundar c film சுந்தர்.சி படத்தில் பிரபல நடிகை

People looking for online information on Sundar C will find this news story useful.