Reliable Software
www.garudabazaar.com

தியேட்டரில் ரிலீசாகும் பிக்பாஸ் நடிகரின் படம்.. படக்குழுவினர் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமானவர் ரியோ ராஜ். இதை தொடர்ந்து இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் ஷ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே இந்த வருடம் பிக்பாஸ் போட்டியில் நடிகர் ரியோ ராஜ் கலந்து கொண்டிருந்தார். இதில் இவரது நகைச்சுவையான பேச்சு ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

popular biggboss actor movie releasing in april பிரபல பிக்பாஸ் நடிகரின் திரைப்படம்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பதாக அவர் 'பிளான் பண்ணி பண்ணனும்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பானா காத்தாடி புகழ் பத்ரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். மேலும் பால சரவணன், தங்கதுரை ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் 'பிளான் பண்ணி பண்ணனும்' என்ற பாடலை இன்று படக்குழுவினர் பிக்பாஸ் வீட்டில் வெளியிட்டனர். இந்த பாடலை பிரேம்ஜி பாடியிருந்தார். இந்நிலையில் 'பிளான் பண்ணி பண்ணனும்' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் உலகமெங்கிலும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என்று படத்தின் இயக்குனர் வெங்கடேஷ் தற்பொழுது அறிவித்துள்ளார்.

Tags : Rio

தொடர்புடைய இணைப்புகள்

popular biggboss actor movie releasing in april பிரபல பிக்பாஸ் நடிகரின் திரைப்படம்.

People looking for online information on Rio will find this news story useful.