Reliable Software
www.garudabazaar.com

Video: இந்த வாரம் ஃபைனலிஸ்ட் யாரு தெரியுமா? கண்கலங்கிய புகழ்.. கடைசியில் ட்விஸ்ட்.. Viral Promo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி சீசன் -2 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.

Cook With Comali Finalist Kani Pugazh Cries for Crazy reason

பொதுவாக விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் விருப்பமான பார்வையாளர்கள் உண்டு. ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அனைவருமே விரும்பிப் பார்த்துவருகின்றனர். அஸ்வின், சிவாங்கி, புகழ், பாலா, பாபா பாஸ்கர், சுனிதா, கனி, சரத், மணிமேகலை, ரேகா மற்றும் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் குக் பண்ணும்போது கோமாளிகள் செய்யும் அலப்பறைகளால் இந்த நிகழ்ச்சி இன்னும் Fun-ஆக போய்க்கொண்டிருக்கிறது. இதனிடையே அவ்வப்போது வரும் மதுரை முத்துவும் ஒவ்வொரு போட்டியாளரின் கிச்சனுக்குமாக சென்று  லந்து செய்துவிட்டு வருவது இன்னும் வேற லெவலில் இருக்கும். குறிப்பாக பாலாவின் பன்ச் வசனங்கள், பாபா பாஸ்கரின் நடனம், சிவாங்கியின் அலப்பறை, புகழின் அட்ராசிட்டீஸ் எல்லாமே இந்த நிகழ்ச்சிக்கான பலம்.

இந்நிகழ்ச்சியில் நீதிபதிகளாக இருக்கும் பிரபல சமையல் நிபுணர்கள் வெங்கடேஷ் பாத் மற்றும் செஃப் தாமோதரன் இருவரும் அவ்வப்போது கோமாளிகளின் சேட்டைகளுக்கு கவுண்ட்டர் கொடுப்பதும் இந்த நிகழ்ச்சியில் இன்னும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2-ல் ஃபைனலிஸ்ட் செய்யப்பட்டிருக்கிற இன்னொரு போட்டியாளராக கனி தகுதி பெற்றுள்ளார்.

இந்த அறிவிப்புக்கு பின் புகழ் திடீரென கண் கலங்குகிறார். அனைவரும் சீரியஸாகின்றனர். ஆனால் அவரோ, ‘இந்த இடத்தில் நாங்கல் ஒருவரை மிஸ் பண்ணுகிறோம். இந்த வெற்றிக்கு அவர் தான் காரணம். வவ்வா மீன் தான் அவர். அவர் பேர் கூட தெரியாது. அவரை நாங்கள் வெட்டி கொன்று தான் இந்த உணவை சமைத்தோம்’ என்று ட்விஸ்ட் அடிக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும், ‘நாங்கூட அவர் அழுததும் என்னவோ ஏதோனு நெனைச்சுட்டேன்’ என கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர். வரும் சனி,ஞாயிறுகளில் ஒளிபரப்பாகவிருக்கும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக இப்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தான் இந்த சுவாரஸ்யங்கள் நடந்துள்ளன. 

இந்நிகழ்ச்சியில் தற்போது  ஃபைனலிஸ்ட் ஆகியுள்ள கனி, பிரபல இயக்குநர் அகத்தியனின் மகள் மட்டுமல்லாமல், பிரபல நடிகைகள் விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனி உள்ளிட்டோரின் சகோதரி ஆவார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடித்திருந்த நிரஞ்சனி அகத்தியன் அண்மையில் தான் அப்படத்தின் இயக்குநர் தேசிங் பெரியசாமியை மணந்தார்.

ALSO READ: தனுஷின் 'ஜகமே தந்திரம்' சென்சார் ரேட்டிங் என்ன தெரியுமா?.. நெட்பிளிக்ஸில் வெளியான தகவல்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali Finalist Kani Pugazh Cries for Crazy reason

People looking for online information on Ashwin, கனி, குக் வித் கோமாளி, CookWithComali, Kani, Pugazh, Sivaangi, Vijaytv will find this news story useful.