Reliable Software
www.garudabazaar.com

தனுஷின் 'ஜகமே தந்திரம்' சென்சார் ரேட்டிங் என்ன தெரியுமா?.. நெட்பிளிக்ஸில் வெளியான தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் மற்றும் பலர் நடிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.

Dhanush Jagame thanthiram censore rating netflix ஜகமே தந்திரம்

இந்நிலையில் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. தனது வாழ்வில் தனது இருப்பிடத்தை அடைய நினைக்கும் சுருளி எனும் கேங்ஸ்டர்  நன்மைக்கும் தீமைக்குமான போரில் எதை தேர்ந்தெடுக்கிறான் என்பதை நோக்கிய இந்த படத்தை Y Not Studios மற்றும் Reliance Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் பல மொழிகளில் 190 நாட்களில் 204 மில்லியன் சந்தாதாரர்களை சென்றடையும் வகையில் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த படம் 18+க்கான திரைப்படம் என்பது தெரியவந்துள்ளது. இந்த தகவல் நெட்பிளிக்ஸின் தளத்தில் ஜகமே தந்திரம் படம் தொடர்பான விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் திரைப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் என்ற்உம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி 2019-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற அசுரன் திரைப்படத்துக்காக தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67வது மத்திய அரசின் தேசிய விருதுகள் தொடர்பில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை பெறுகிறார். அசுரன் திரைப்படமும் சிறந்த மாநில மொழிப்படத்துக்கான தேசிய விருதினை பெறுகிறது.

ALSO READ: அசுரன் படத்துக்கும் தனுஷ்க்கும் தேசிய விருது. முன்பே சொன்ன சிவகார்த்திகேயன்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Jagame thanthiram censore rating netflix ஜகமே தந்திரம்

People looking for online information on Dhanush, Jagame Thanthiram, Karthik Subburaj, Netflix will find this news story useful.