குக் வித் கோமாளி வைல்டு கார்டு சுற்றில் நிச்சயம் பங்கேற்பேன்... பிரபல நடிகை உற்சாகம்..!
முகப்பு > சினிமா செய்திகள்குக் வித் கோமாளி நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள போட்டியில் இந்த வாரம் கனி, பாபா பாஸ்கர், ஷகிலா அஸ்வின் ஆகியோர் செமி பைனல்ஸ் சுற்றை எட்டியுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷன் ரவுண்ட் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். அதுவும் பலரின் பேவரைட் அஸ்வின் மற்றும் பவித்ரா எலிமினேஷன் போட்டியில் பங்கெடுத்திருந்தனர். இதனையடுத்து யார் வெளியேறுவார் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த நிலையில் பவித்ரா வெளியேறினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது semi-finals நெருங்கியுள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது. ஏனென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் கவலைகளை மறந்து சிரிக்க இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அருமருந்தாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். எனவே இன்னும் சில எக்ஸ்ட்ரா வாரங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் கூட நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அதேபோல் சீக்கிரமே வைல்டு கார்டு சுற்று நடைபெற இருக்கிறது. இதனையடுத்து பிரபல கடை ஒன்றின் திறப்பு விழாவில் குக் வித் கோமாளி பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். அப்பொழுது முன்னாள் போட்டியாளர் தர்ஷா குப்தா கூறுகையில் வைரல்டு கார்டு நிகழ்ச்சி எப்பொழுது நடக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அதில் நான் நிச்சயமாக பங்கேற்பேன். சமைப்பதற்காக மட்டுமல்ல, எனது நண்பர்களுடன் மீண்டும் பழைய நினைவுகளை உருவாக்கவே அப்படி செய்யப்போகிறேன்" என்று கூறியுள்ளார்.
குக் வித் கோமாளி வைல்டு கார்டு சுற்றில் நிச்சயம் பங்கேற்பேன்... பிரபல நடிகை உற்சாகம்..! வீடியோ