Reliable Software
www.garudabazaar.com

நடிகை ஹன்சிகா வீட்டில் களைகட்டிய திருமண விழா.. வெளியான புகைப்படங்கள்... வாழ்த்தும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தில் ஹன்சிகா மோத்வானி, தனது முதல் படம் மூலம் நம் மனதில் தன்னை நிலை ப்படுத்திக் கொண்டார். திரையுலகின் முன்னணி ஹீரோக்களுடன் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா நடித்த '100' படத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு, அவர் ஹீரோயின் மையமான 'மஹா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

marriage celebrations in hansika household ஹன்சிகா வீட்டில் திருமண விழா

இந்நிலையில் அவர் தற்போது டயட் மற்றும் உடற் பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக குறைத்திருக்கிறார். பார்ப்பதற்கு ஆளே மாறி போயிருக்கும் அவர் நம்ம ஹன்சிகாவா என்று மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு மாறி போயிருக்கிறார். அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.  தற்போது ஹன்சிகாவின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆம்  ஹன்சிகாவின் அண்ணன், பிரசாந்த் மோத்வானிக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. மார்ச் 20-ம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அரண்மனையில் இந்த திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றுள்ளது.

நடிகை ஹன்சிகா வீட்டில் களைகட்டிய திருமண விழா.. வெளியான புகைப்படங்கள்... வாழ்த்தும் ரசிகர்கள்! வீடியோ

Tags : Hansika

தொடர்புடைய இணைப்புகள்

marriage celebrations in hansika household ஹன்சிகா வீட்டில் திருமண விழா

People looking for online information on Hansika will find this news story useful.