BREAKING : முதல் முறையாக இந்த ஸ்டார் படத்திற்காக இசையமைக்கும் ஏ. ஆர். ரகுமான்! விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 27, 2019 02:55 PM
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான படம் கோமாளி. இந்த படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.
ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். 90 கிட்ஸ்களின் நினைவுகளை தூண்டிவிடுவது போல் அமைந்துள்ள இந்த படத்தின் திரைக்கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இதனையடுத்து ஜெயம் ரவி ஈகிள்ஸ் ஐய் தயாரிப்பில் மனிதன், என்றென்றும் புன்னகை படங்களின் இயக்குநர் அஹமத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். மேலும் ஆகஸ்ட் 21 முதல் அஸெர்பைஜான் நாட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் டாப்ஸி கலந்துகொள்கிறார் என்று முன்பே அறிவித்திருத்தேம் இந்நிலையில் இப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.