RRR Others USA

15 லட்சத்துடன் வெளியேறிய சுருதி... விறுவிறுப்பில் BB Ultimate.. நடந்தது என்ன??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில், தற்போது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

suruthi won 15 lakh rupees prize and exit bb ultimate house

இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இருந்து, போட்டியாளர்களைத் தேர்வு செய்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில், வார இறுதி நாட்களில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு, போட்டியாளர்களிடம் உரையாடுவது வழக்கம்.

எப்போது வேண்டுமானாலும், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பார்க்க முடியும் என்பதால், தினந்தோறும் பிக்பாஸ் போட்டியாளர்கள் தொடர்பான விஷயங்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகும்.

வெளியேறிய சதீஷ், அனிதா

அதே போல, இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும், ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டியதை போல தான் தெரிகிறது. முன்னதாக, அனிதா கடைசியாக வெளியேறி இருந்த நிலையில், அடுத்ததாக சாண்டி மற்றும் தீனா ஆகியோர் உள்ளே வந்தனர். இதனிடையே, தனிப்பட்ட காரணங்களுக்காக சதீஷ் வெளியேற, விருந்தினர்களாக வந்த சாண்டி மற்றும் தீனா ஆகியோரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து கிளம்பினர்.

போக போக தூரம் குறையல..

இதனையடுத்து, தாமரை, ரம்யா பாண்டியன், ஜூலி, பாலா, நிரூப், ஸ்ருதி மற்றும் அபிராமி ஆகியோர் உள்ளே இருந்தனர். இதனிடையே, பணப்பெட்டிக்கான டாஸ்க் ஒன்று சமீபத்தில் நடந்திருந்தது. இதற்கு வேண்டி, "போக போக தூரம் குறையல" என்ற பெயரில் போட்டி ஒன்று நடைபெற்றிருந்தது. பகடையை (Dice) உருட்டி, அதில் வரும் எண்ணுற்கேற்ப முன்னேறி சென்று, இறுதியில் வெற்றி பெறும் நபருக்கு 15 லட்சம் ருபாய் பரிசை எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது.

suruthi won 15 lakh rupees prize and exit bb ultimate house

வெற்றி பெற்ற சுருதி

இந்நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்றது யார் என்பது பற்றிய அறிவிப்பை பிக்பாஸ், ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் வெளியிட்டுள்ளது. தனது பெயர் அறிவிக்கப்பட்டதும், ஆச்சரியத்தில் உறைந்து போனார் சுருதி. மற்ற போட்டியாளர்களும், அவரை வாழ்த்தி அனுப்பி வைக்க, 15 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு, பிக்பாஸ் வீட்டில் இருந்து சுருதி கிளம்பி உள்ளார்.

suruthi won 15 lakh rupees prize and exit bb ultimate house

கணித்து வரும் ரசிகர்கள்

நாளுக்கு நாள் சண்டை, சச்சரவு என அல்லோலப்பட்டு கிடக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், யார் வெற்றி பெறுவார்கள் என்பது பற்றி, தற்போதே ரசிகர்கள் கணித்தும், மறுபக்கம் தங்களின் ஃபேவரைட் போட்டியாளர்களுக்கு வாக்களித்தும் வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

suruthi won 15 lakh rupees prize and exit bb ultimate house

People looking for online information on Balaji, BB Ultimate, BB Ultimate Promo, Niroop, Ramya Pandian, Suruthi, Thamarai will find this news story useful.