RRR Others USA

"எனக்கு கல்யாணம்!!.." யாஷிகாவின் பதிவு.. ஆனாலும் இடிக்குதே.. குழப்பத்தில் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விபத்து ஒன்றில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த், அதிலிருந்து மீண்டு வந்து, மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என ஒட்டு மொத்தமாக ஆக்டிவ் மோடில் உள்ளார்.

Yashika aannand instagram story about marriage gone viral

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ள தகவல் ஒன்று, அதிகம் வைரலாகி வருகிறது.

ஜீவா நடிப்பில் கவலை வேண்டாம் படத்தில், சிறு கதாபாத்திரம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இதனைத் தொடர்ந்து, இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இன்ஸ்டாகிராமில் படு 'ஆக்டிவ்'

அது மட்டுமில்லாமல், தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில், போட்டியாளராக யாஷிகா ஆனந்த் களமிறங்கி இருந்தது, அவரை இன்னும் அதிகம் மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்திருந்தது. அதே போல, தன்னுடைய சமூக வலைத்தளங்களிலும், போட்டோஷூட், தன்னுடைய வாழ்வின் தினசரி நிகழ்வுகள் என அனைத்தையும் பகிர்ந்து, ரசிகர்களுடன் உரையாடியும் வருவார்.

விபத்தில் இருந்து மீண்ட யாஷிகா

இதனிடையே, கடந்த ஆண்டு ஜூலை மாதம், தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கினார் யாஷிகா ஆனந்த். இந்த விபத்தில், அவரது நெருங்கிய தோழி உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த யாஷிகா, சுமார் 4 மாதங்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது, முற்றிலுமாக குணமடைந்துள்ள நடிகை யாஷிகா ஆனந்த், முன்பு போல திரைப்படங்கள் மற்றும் சமூக வலைத்தங்கள் என எப்போதும் பிசியாக இருந்து வருகிறார். அதே போல, தனது தோழியின் மரணம் குறித்தும், தன்னுடைய தனிப்பட்ட காரியங்கள் குறித்தும், ரசிகர்கள் எந்த மாதிரி தாக்கினாலும், அதிலிருந்து மறைந்து கொள்ளாமல், நேரடியாக தனது கருத்தினை வெளிப்படுத்தி, பதிலடி கொடுப்பதிலும் யாஷிக் ஆனந்த் கெட்டிக்காரி.

கல்யாணம் பண்ணிக்க போறேன்

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில், தன்னுடைய திருமணம் குறித்து, யாஷிகா ஆனந்த் போட்டுள்ள ஸ்டோரி ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. "நான் திருமணம் செய்து கொள்ளப் போவதை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது பெற்றோர்கள் அதற்கு சம்மதித்தனர். நான் சினிமாவை நேசிக்கிறேன். என்ன ஆனாலும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடித்து உங்களை மகிழ்விப்பேன்.

இது Arrange Marriage தான். காதல் எல்லாம் செட் ஆகாது. உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். யாஷிகா திருமணம் செய்து கொள்ளப் போவதாக, இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தாலும், ஒரு வேளை ஏப்ரல் 1 ஆம் தேதி என்பதால், அவரின் prank ஆகக் கூட திருமண செய்தி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Yashika aannand instagram story about marriage gone viral

People looking for online information on April 1, Instagram Post, Kavalai Vendam, Marriage, Yashika Aannand will find this news story useful.