‘ஒரு துளி வேர்வைக்கு.. ஒரு பவுன் தங்கக்காசு’ - படக்குழுவுக்கு அன்பு பரிசளித்த சூர்யா!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 28, 2019 12:29 PM
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ‘காப்பான்’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து தற்போது ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் படக்குழுவிற்கு நடிகர் சூர்யா தங்கக் காசு பரிசளித்துள்ளார்.

இப்படத்தை ஆஸ்கர் விருது வென்ற தயாரிப்பாளர் குனீத் மோங்காவுடன் இணைந்து நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பேனரில் தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்த அபர்ணா முரளி நடிக்கிறார். மேலும், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் தெலுங்கு நடிகர் மோகன் பாபு நடிக்கவிருக்கிறார்.
‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. அதையொட்டி, படத்தில் பணியாற்றிய 150 துணை நடிகர்கள், நடிகைகள், டெக்னீசியன்ஸ்களுக்கு நடிகர் சூர்யா, 8 கிராம் தங்க காசு ஒன்றை பரிசளித்துள்ளார். தற்போது அந்த தங்கக்காசு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.