www.garudabazaar.com

ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்'.. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட சூப்பர் மாஸ் BTS ஸ்டில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

Super Star Rajinikanth still from the sets of Jailer

Also Read | பிரபல OTT-யில் ரிலீஸாகும் 'GOD FATHER'.. சிரஞ்சீவி & சல்மான் கான் FANS-க்கு ட்ரீட் தான்!

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது அடுத்த 169வது படத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுடன் பணிபுரிகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து.

Super Star Rajinikanth still from the sets of Jailer

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார்.

Super Star Rajinikanth still from the sets of Jailer

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரின் பிரத்யேக BTS புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

Super Star Rajinikanth still from the sets of Jailer

ஜெயிலர் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் இரண்டு புதிய படங்களின் தகவல் அதிகாரப்பூர்வமாக சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். அதில் ஒரு படமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

 

Also Read | காயத்தில் இருந்து மீண்டு வரும் அருண் விஜய்.. ஜிம்மில் இருந்து வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ!

 

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth still from the sets of Jailer

People looking for online information on Jailer, Nelson Dilipkumar, Rajinikanth will find this news story useful.