KAAPAN USA OTHERS

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் கோனிடேலா புரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ளார்.

Chiranjeevi praises Vijay Sethupathi in Syeraa Narasimha Reddy

இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், நயன்தாரா, தமன்னா, ஜெகபதிபாபு, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்துக்கு அமித் திரிவேதி இசையமைக்க ரத்னவேலு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்த படத்தின் Pre Release Event சமீபத்தில் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு பேசிய சிரஞ்சீவி, விஜய் சேதுபதி குறித்து புகழ்ந்து பேசினார். அப்போது பேசிய அவர், ''விஜய் சேதுபதி எவ்ளோ பிஸியான ஆர்ட்டிஸ்ட்னா டே அண்ட் நைட் வேல பார்த்துட்டு இருக்காரு. ஆனாலும் இந்த படத்தில் நடிக்க கேட்டதும் 'சிரஞ்சீவி எங்க அண்ணன் மாதிரி' என்று ஒப்புகொண்டதற்கு நன்றி விஜய் சேதுபதி'' என்றார்.