Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

VIDEO: 'சிங்கிள் டேக்ல ஆடுவோம்ல!'.. சுட்டிக் குழந்தைகளின் 'வாத்தி கம்மிங்'.. தரமான சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைப்படம் அனைத்து வயதினரையும் எளிதில் ஈர்த்துவிடும் மிக முக்கியமான ஒரு கருவி. குறிப்பாக திரைப்படத்தில் வரும் துள்ளலான பாடல்கள் குழந்தைகளை எளிதில் கவர்ந்து விடும். அந்த பாடல்களுக்கு அர்த்தம் கூட அவர்களுக்கு தெரிய தேவையில்லை. அந்த பீட்டை கேட்டாலே குழந்தைகள் டான்ஸராகிவிடுவார்கள்.

children dancing vaathi coming trending வாத்தி கம்மிங்

அந்த வகையில் அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. விஜயுடன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு மற்றும் பலர் நடித்த இந்த படத்தில் வாத்தி கம்மிங் எனும் பாடல் அனிருத் இசையில் உருவாகி பட்டையை கிளப்பியது. இந்திய கிரிக்கெட் பிரபலம் அஸ்வின் தொடங்கி பல முன்னணி நட்சத்திரங்களும் வேறு துறையில் இருக்கும் பிரபலங்களும் இந்த பாடலுக்கு நடனமாடி அவ்வப்போது தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

படம் வெளியாகி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் இந்த பாடலுக்கான மவுசு குறைந்தபாடில்லை. அந்த வகையில் சிறுவன் ஒருவனும் அந்த சிறுவனின் இடுப்பளவு உயரம் மட்டுமே இருக்கும் இன்னொரு குழந்தையும் டிவியில் ஓடும் வாத்தி கம்மிங் பாடலுக்கு சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்டுகள் போல வெறித்தனமாக டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த சிறுவனை காட்டிலும் அந்த குட்டி குழந்தை வாத்தி கம்மிங் பாடலில் வரும் மிக பிரபலமான அந்த ஸ்டெப்பை அச்சுப்பிசகாமல் அப்படியே செய்கிறது.

இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தின் தளபதி65  படத்தில்  நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: சட்டையை மடக்கிக் கொண்டு சண்டையில் இறங்கிய லிஜெண்ட் சரவணன் .. இணையத்தில் கலக்கும் மாஸ் புகைப்படங்கள்!

VIDEO: 'சிங்கிள் டேக்ல ஆடுவோம்ல!'.. சுட்டிக் குழந்தைகளின் 'வாத்தி கம்மிங்'.. தரமான சம்பவம்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

children dancing vaathi coming trending வாத்தி கம்மிங்

People looking for online information on Master, Trending, Vaathicoming, Video will find this news story useful.