Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

அவன கண்டா வரச்சொல்லுங்க.. “இது புகழ் அழைப்பு!”.. அவரே பகிர்ந்த ‘தெறிக்க விடும்’ வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.

Kandaa Vara sollunga Vijay TV Pugazh Version Video கர்ணன் புகழ்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதுமே இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதில் கைவிலங்கு மாட்டிக் கொண்டு தனுஷ் கைதி போல் நின்று கொண்டிருந்தார். இந்த போஸ்டரே ஏதோ ஒரு கதையை சொல்ல வருகிறது என்று ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கர்ணன் திரைப்படத்தின் முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க பாடல் வெளியானது.

சந்தோஷ் நாராயணன் இசையில் நாட்டுப்புற பாடகி கிடாக்குழி மாரியம்மாள் பாடிய இந்த பாடல் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்த பாடலை தழுவி பல பிரபலங்களின் வெர்ஷன்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் புகழ் வெர்ஷன் தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய்டிவி குக் வித் கோமாளி உள்ளிட்ட சில நகைச்சுவை ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமான புகழ் சில படங்களிலும் நடித்து வருகிறார்.

 

அவ்வப்போது இன்ஸ்டாகிராம் கலகலப்பான வீடியோக்களை பதிவிடும் புகழ், தனது கண்டா வரச்சொல்லுங்க ‘புகழ் அழைப்பு’ எனும் வெர்ஷனை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Kandaa Vara sollunga Vijay TV Pugazh Version Video கர்ணன் புகழ்

People looking for online information on Cook with comali, Pugazh will find this news story useful.