Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

"இந்த பகுதிகளில் தான் அஜித் சைக்ளிங் போவார்.. இதுவரை கடந்த தூரம் தெரியுமா?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் சைக்கிளிங் பண்ணும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Where Thala Ajith goes for Cycling Trending அஜித் சைக்ளிங்

கடந்த சில நாட்களாக தல அஜித்தின் ரசிகர்கள் வலிமை தொடர்பான அப்டேட்களை கேட்டு வந்த நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாகவும் விரைவில் முதல்பார்வை போஸ்டர் வெளியிடப்படும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தார். வலிமை வெளியீடு தொடர்பான முடிவுகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் வலிமை அப்டேட் கேட்கும் ரசிகர்களுக்கு அஜித் தமது தரப்பிலிருந்தும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே அண்மையில் சென்னையில் அஜித் துப்பாக்கிச் சுடும் விளையாட்டு பயிற்சியினை மேற்கொள்வதற்காக வருகை தந்த புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில் நண்பர்களுடன் அஜித் சைக்கிளிங் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதுபற்றி அஜித்தின் நண்பர் சுரேஷ்குமார் தமது சமூக வலைப்பக்கத்தில் குறிப்பிடும்போது சுமார் 15 வருடங்களுக்கு மேலாக அஜித்துடன் இணைந்து சைக்கிளிங் செய்வதாகவும் தல அஜித் தான் பார்த்ததில்லையே கடுமையான போராளி என்றும் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு சைக்கிளிங் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அஜித் இந்தியாவில் ஹைதராபாத், விசாகப்பட்டினம், கோயமுத்தூர், திருப்பதி மற்றும் சில வடமாநில பகுதிகளில் சைக்கிளிங் செய்வார் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுவரை அஜித்துடன் இணைந்து தாம் 30 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிளிங் செய்ததாகவும் இன்னும் சர்வதேச அளவில் ஒப்பிடுகையில் ஆயிரமாயிரம் தொலைவுகள் கடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அஜித்திடமிருந்து சைக்கிளிங் செய்யும் இந்த வாழ்க்கைக்கு மிக முக்கியமான ஒன்றை, தான் கற்றுக் கொண்டதாகவும் அத்துடன் அவரிடம் இருக்கும் அந்த ஒழுக்கம் நாம் கற்றுக்கொள்ளவேண்டும் வேண்டியது என்றும் அது வாழ்க்கையை எளிமைப்படுத்தும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதனை அஜித் ரசிகர்கள் பக்கங்களில் அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

ALSO READ: "இந்த சந்தோஷத்துக்கு காரணமே நீங்கதான்".. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை..  கேக் வெட்டி கொண்டாட்டம்!

தொடர்புடைய இணைப்புகள்

Where Thala Ajith goes for Cycling Trending அஜித் சைக்ளிங்

People looking for online information on Ajith Kumar, AjithCycling, ThalaAjith, Trending, Valimai will find this news story useful.