Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

சட்டையை மடக்கிக் கொண்டு சண்டையில் இறங்கிய லிஜெண்ட் சரவணன் .. வைரலாகும் மாஸ் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் லிஜெண்ட் சரவணன் தம்முடைய முதல் படத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டார்.

Saravana Stores legend Saravanan Debut movie mass pics சரவணன்

பெரிய நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் முன்னதாக சரவணா ஸ்டோர்ஸ் தொடர்பான புரோமோஷனல் விளம்பரங்களில் லெஜெண்ட் சரவணன் தாமே நடித்து கொண்டிருந்தார். சொல்லப்போனால் இதன் மூலம் மக்களிடத்தில் லிஜெண்ட் சரவணன் பிரபலமானார். இந்நிலையில் தம்முடைய முதல் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் முதல் படத்தில் நடிப்பதற்கு ஆயத்தமாய் இருக்கிறார் சரவணன்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் நேரடியாக சரவணன் அறிமுகமாகிறார். இரட்டை இயக்குநர்கள் ஜேடி மற்றும் ஜெர்ரி இந்த படத்தை இயக்குகின்றனர். இதில் அறிமுக நடிகை கீதிகா திவாரி நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் மற்றும் பலர்

நடிக்கின்றனர்.

தவிர இன்னொரு பிரபலமான ஹீரோயினும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் பணியை மேற்கொள்கிறார். மிகப்பெரிய பாடல் காட்சியுடன் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படும் இந்த படத்தில் வைரமுத்து, பா.விஜய், சிநேகன் பாடல்களை எழுதுகின்றனர். 

ALSO READ: அவன கண்டா வரச்சொல்லுங்க.. “இது புகழ் அழைப்பு!”.. அவரே பகிர்ந்த ‘தெறிக்க விடும்’ வீடியோ!

Saravana Stores legend Saravanan Debut movie mass pics சரவணன்

People looking for online information on Jd jerry, Legend Saravanan, Saravana stores will find this news story useful.