''இளமை திரும்புதே...' சூப்பர் ஸ்டாரின் பேட்ட பார்த்துருப்பீங்க... இது நம்ம தல தோனியின் பேட்ட...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வருகிற மார்ச் 29 ஆம் தேதி துவங்கவிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டு போட்டிக்கான அட்டவணைகள் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக சென்னை ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதிக்கு தள்ளிப்போகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் சார்பாக விளையாடும் தல தோனி சென்னை வந்து பயிற்சி மேற்கொள்ளத்தொடங்கினார். அவரது புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வைரலாகி வந்தன. மேலும் ரெய்னாவுடன் இணைந்து சத்யம் திரையரங்கில் பாகி 3 திரைப்படத்தை அவர் கண்டு கழித்தார்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து  இளமை திரும்புதே என்று குறிப்பிடுள்ளது. இளமை திரும்புதே பாடல் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த 'பேட்ட' படத்தில் இடம் பெற்றிருந்து. இந்த பாடலை தனுஷ் எழுத, அனிருத் இசையமைத்திருந்தார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ilamai thirumbudhey 🎶 #DhinamOruDhoni #WhistlePodu 🦁💛

A post shared by Chennai Super Kings (@chennaiipl) on

Entertainment sub editor