Breaking: சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் இணைகிறாரா ஹிப்ஹாப் தமிழா? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 22, 2019 03:30 PM
ராஜேஷ் எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த மே 17 ஆம் தேதி வெளியான படம் 'மிஸ்டர்.லோக்கல்'. இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருந்தார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில் எங்களுக்கு கிடைத்த தகவலின் படி ஹிப்ஹாப் தமிழாவை ஹீரோவாக வைத்து ராஜேஷ்.எம் ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. இந்த படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்து ஏப்ரல் 4 வெளியான படம் நட்பே துணை. இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கினார். இந்த படத்தில் அனகா, கரு.பழனியப்பன், விக்னேஷ் காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
Tags : Hip Hop Tamizha Adhi, Rajesh M