Lucifer All Banner USA
Super Deluxe All Banner USA

பிரபல நடிகரின் மகள் ரிசப்ஷன்: திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு கலந்துக் கொண்டார்.

Celebrities attended Venkatesh's daughter Aashritha's wedding reception in Hyderabad

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் அஷ்ரிதாவுக்கும், விநாயக் ரெட்டி என்பவருக்கும் கடந்த வாரம் ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.

முன்னணி தெலுங்கு மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் திரை பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு மற்றும் சில முக்கிய அரசியல் பிரபலங்கள் பங்கேற்றனர். மேலும், தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.