ரசிகர்களால் கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். இவர் 'சகாப்தம்' படத்தின் மூலம் ஹீரோவாக திரையுலகில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் 'மதுர வீரன்' என்கிற படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பிஜி முத்தையா இயக்கியிருந்தார்.
இதனையடுத்து சண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் பற்றி தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தை பூபாலன் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குநர் சிவாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
இந்த படத்தை ஜி எண்டர்டெயினர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ரோனிகா சிங், வம்சி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்துக்கு அருண் ராஜ் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்கள் எழுதவுள்ளார்.