www.garudabazaar.com

Yashika: “5 மாசம் நிக்க.. நடக்க முடியாது... இயற்கை உபாதைகள் கூட”.. யாஷிகாவின் கலங்கவைக்கும் உடல்நிலை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கார் விபத்தில் படுகாயம் அடைந்தார் யாஷிகா ஆனந்த்.

cant walk stand everything on bed Yashika health update

ஈசிஆர் சாலையில் நள்ளிரவில் நண்பர்கள் மற்றும் தோழியுடன் சென்ற யாஷிகாவின் கார், கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்புச்சுவரில் மோதியதால்  நடந்த இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி உயிரிழந்தார்.

cant walk stand everything on bed Yashika health update

இந்நிலையில் தான் தற்போது கண்விழித்துள்ள யாஷிகா ஆனந்த், தம்முடைய உடல்நலம் குறித்த அப்டேட்டினை சமூக வலைதளம் வாயிலாக அறிவித்துள்ளார். முன்னதாக தான் பிழைத்து வர பிரார்த்தனை செய்தோருக்கு நன்றி கூறியுள்ள யாஷிகா, அனைவரின் கூட்டு பிரார்த்தனையினால் தான் பிழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

cant walk stand everything on bed Yashika health update

இந்நிலையில் தமது உடல் நலம் குறித்து சொல்லும்போது, “இடுப்பு பகுதியிலும் கால்களிலும் எலும்பு முறிவு உண்டாகியிருக்கிறது. சர்ஜரி செய்யப்பட்டதை அடுத்து ஓய்வில் இருக்கிறேன்.

அடுத்த 5 மாதத்திற்கு நிற்கவோ நடக்கவோ கூட என்னால்  முடியாது. அதன் காரணமாக இயற்கை உபாதைகள் என எல்லாமே படுக்கையில் தான். இடது புறமாகவோ, வலது புறமாகவோ திரும்புவதற்கும் இயலாது.

cant walk stand everything on bed Yashika health update

பலத்த காயம் அடைந்துள்ளது முதுகு. நல்லவேளையாய் முகத்திற்கு ஒன்றும் ஆகிவிடவில்லை. நிச்சயமாக இது எனக்கு இன்னோரு பிறப்பு தான். கடவுள் எனக்கு தண்டனை அளித்துவிட்டார். ஆனால் நான் இழந்தவற்றை விட ஒப்பிட்டால் இந்த இழப்பு ஒன்றுமே இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: கொந்தளித்த Yashika.. "Delivery Boy மரணத்துக்கு நான் காரணமா?".. "ஒவ்வொரு நொடியும்".. உருக்கமான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

cant walk stand everything on bed Yashika health update

People looking for online information on Yashika Aannand will find this news story useful.