Breaking: விஜய்யின் 'தளபதி 64' படத்தை யார் தயாரிக்க போகிறார்கள் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'தளபதி 63'. இந்த படத்தில் நயன்தாரா, கதிர், யோகிபாபு, ஜாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துவருகின்றனர்.

Britto to Produce Vijay and Lokesh Kanagaraj's Thalapathy 64

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் காட்சிகள் படமாகி வருவதாக நமக்கு தகவல்கள் கிடைத்தன.

இந்த படத்தைத் தொடர்ந்து மாநகரம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, இந்த படத்தை பிரிட்டோ என்பவர் தயாரிக்கவிருக்கிறாராம்.

பிரிட்டோவின் சார்பில் பிவி கம்பைன்ஸ் மற்றும் எஸ்தெல் எண்டர்டெயின்மென்ட் ஆகிய சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.