தளபதி 63 ஸ்பாட்டில் நடிகைக்கு பர்த்டே சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படத்தில் நடிக்கும் நடிகையின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

Vijay surprises Thalapathy 63 star Amirtha Aiyer with a birthday cake in the EVP sets

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இவிபி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் புதிதாக நடிகை அம்ரிதா இணைந்துள்ளார். விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’, விஜய் யேசுதாஸுடன் ‘படைவீரன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் கால்பந்து அணியில் பல இளம் நடிகைகள் நடித்து வரும் நிலையில், அம்ரிதாவும் புதிதாக இணைந்துள்ளார். கடந்த மே.14ம் தேதி அம்ரிதாவின் பிறந்தநாளையொட்டி தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் சர்ப்ரைஸாக கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். நடிகை அம்ரிதா ஏற்கனவே விஜய் நடித்த ‘தெறி’ உள்ளிட்ட சில விஜய் திரைப்படங்களில் நடித்துள்ளார்.