www.garudabazaar.com

Brahmastra: "எனக்கு அவர்தான் க்ரஷ்.." - BB Jodigal-ல் நாகார்ஜூனா, ராஜமௌலி, ரன்பீர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை 5 சீசன்கள் நிறைவடைந்திருக்கும் இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் அடுத்து வரவிருக்கிறது. இதில் ரசிகர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம், அதாவது பொது மக்களில் இருந்து யார் வேண்டுமானாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என்கிற புதிய வாய்ப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

brahmastra Nagarjuna SS Rajamouli Ranbir Kapoor in BB Jodigal 2

Also Read | Hrithik Roshan: ரசிகர் காலில் விழுந்த ஹிருத்திக் ரோஷன்.. ‘எதனால இப்படி பண்ணாரு?’ - வைரல் வீடியோ

இதனிடையே பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட முன்னாள் போட்டியாளர்களை கொண்டு நடன நிகழ்ச்சி ஒன்று BB Jodigal என்கிற பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களாக நடந்திருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் தற்போதைய இரண்டாவது சீசனில் நடுவர்களாக ரம்யா கிருஷ்ணன் மற்றும் சதீஷ் மாஸ்டர் அமர்ந்திருக்கின்றனர். போட்டியாளர்களாக அமீர் - பாவனி, தாமரை-பார்த்தசாரதி, ஆர்த்தி - கணேஷ்கர், சுஜாவருணி - சிவா மற்றும் பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களுள் யார் ஃபைனலுக்கு செல்ல போகிறார்கள் என்கிற போட்டி நடந்து கொண்டு வந்திருந்தது.

இதனிடையே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இந்திய திரை உலக ஜாம்பவான்களான, இயக்குனர் ராஜமௌலி, நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகர் ரன்பீர் கபூர் மூவரும் வருகை தந்திருக்கின்றனர். இது தொடர்பான புரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில்  செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா. இப்படத்தில் நாகார்ஜூனா மற்றும் அமிதாப் பச்சனும் நடித்திருக்கிறார்கள். தவிர, இப்படத்தில் நடிகர் ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தை தென்னிந்தியாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிடுகிறார். இந்நிலையில் இந்த பட ப்ரோமோஷனுக்காக விஜய் டிவி BB Jodigal நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ராஜமௌலி, சென்னைதான் தனக்கு சினிமாவை கற்றுத் தந்ததாகவும் பல வருடங்கள் சென்னையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

இதில் நாகார்ஜூனாவின் க்ரஷ் பற்றி தொகுப்பாளர்கள் விளையாட்டாக கேட்க, அதற்கு அங்கிருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், ‘எத்தனை க்ரஷ்னு கேளுங்க.. ஒன்னா ரெண்டா.. அவருக்கு எவ்வளவு க்ரஷ்ஷோ.. ஆனா எனக்கெல்லாம் அவர் தான் க்ரஷ்’ என ஜாலியாக கூறினார். முன்னதாக பேசிய நடிகர் நாகார்ஜூனா, BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்குபெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டத்துடன், அதில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தமிழ் - தெலுங்கு இருமொழிகளிலும் பிரபலமான நடிகர் நாகார்ஜூனா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வருவதுடன், தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை அண்மையில் தொகுத்து வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Natchathiram Nagargirathu: பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ .. நெகிழ்ந்து பாராட்டிய அனுராக் காஷ்யப்.!

தொடர்புடைய இணைப்புகள்

brahmastra Nagarjuna SS Rajamouli Ranbir Kapoor in BB Jodigal 2

People looking for online information on Alia Bhatt, Brahmastra, Nagarjuna, Ranbir Kapoor, SS Rajamouli will find this news story useful.