SS ராஜமௌலியின் பட்டறையின் அடுத்த பிரம்மாண்டம்.. பான் இந்திய படமாக உருவாகும் '1770'
முகப்பு > சினிமா செய்திகள்பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளர் அஷ்வின் கங்கராஜூ இயக்கத்தில் தயாராகும் புதிய படம் '1770'.
Also Read | மோகன்லாலின் லூசிபர் படத்தின் 2ஆம் பாகம்.. இயக்குனர் பிரித்வி ராஜ் கொடுத்த அப்டேட்! வைரல் Photo
சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜி எழுத்தில் தயாரான ‘1770’ என பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை பான் இந்திய இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் உதவியாளரான அஷ்வின் கங்கராஜூ இயக்குகிறார்.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர்கள் சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் இணைந்து பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வங்காள நாவலான ‘ஆனந்த மடம்’ நாவலைத் தழுவி, ‘1770’ எனும் இந்த புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். எஸ் எஸ் 1 என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் பி. கே. என்டர்டெய்ன்மென்ட் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் இந்த படம் உருவாகிறது.
இப்படத்தைப் பற்றி இயக்குநர் அஸ்வின் கங்கராஜூ பேசுகையில், “இந்த தலைப்பு எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இந்தியாவின் பிரபலமான கதாசிரியர் வி. விஜயேந்திர பிரசாத் அவர்கள் கதை மற்றும் திரைக்கதையை எழுதி எளிமைப்படுத்தியதால், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் படைப்பாக உருவாகும் என நினைக்கிறேன். ஒரு படைப்பாளியாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திய படைப்புகள், வாழ்க்கையை விட உணர்வுகளும் ஆக்ஷனும் மிகுந்த கதைகளை நோக்கி ஈர்க்கப்பட்டேன். அந்த தருணத்தில் இந்த கதை எனக்கு பொருத்தமானதாக இருக்கும் என தோன்றியது. தொடக்கத்தில் சிறிது தயக்கம் எட்டிப் பார்த்தது. ஆனால் கதாசிரியர் ராம் கமல் முகர்ஜியை சந்தித்ததும், கதையை அவரது கோணத்தில் கேட்டதும் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது.
தயாரிப்பாளர்களான சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார், சூரஜ் சர்மா ஆகியோரை மும்பையில் சந்தித்தேன். அவர்களிடம் படத்தை பற்றியும், அதனை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது குறித்தும் நீண்ட நேரம் விவாதித்தோம். தயாரிப்பாளர்களின் அக்கறையுடனான அரவணைப்பும், குழுவாக பணியாற்றும் அவர்களது அணுகுமுறையும் எனக்கு பிடித்தது- இதன் காரணங்களால் அவர்களுடன் உடனடியாக இணைந்து பணியாற்ற தொடங்கி விட்டேன்.” என்றார்.
இப்படத்தைப் பற்றி கதாசிரியரும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தையுமான வி. விஜயேந்திர பிரசாத் பேசுகையில், “வந்தே மாதரம் என்பது மந்திர வார்த்தை என நான் உணர்கிறேன். கொடுங்கோன்மை மற்றும் அநீதிக்கு எதிராக தேசம் ஒன்றுபட மகரிஷி பக்கிம் சந்திர சட்டர்ஜி வழங்கிய மந்திர சொல் அது. அதனை நாங்கள் ‘1770’ படைப்பில் கையாண்டிருக்கிறோம். அத்துடன் சுதந்திர வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட முகம் அறியாத வீரர்களின் கதையுடன் இதனை இணைந்திருக்கிறோம்.” என்றார்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளரும், இயக்குநரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராம் கமல் முகர்ஜி பேசுகையில், “என் தொலைநோக்கு பார்வை மீது நம்பிக்கை வைத்ததற்காக முதலில் தயாரிப்பாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படைப்பாளியாக அஷ்வினின் அணுகுமுறையை பெரிதும் விரும்பினேன். அவர் தன்னுடைய கற்பனையுடன் கூடிய திறமைகளை வெளிப்படுத்த தயாராகிவிட்டார். அது காட்சியமைப்புகளை மேலும் பிரம்மாண்டமாக்கியது. அவரது இயக்கத்தில் வெளியான ‘ஆகாஷ்வாணி’ திரைப்படத்தை பார்த்து ரசித்தேன். அந்த படைப்பில் ஒரு கதை சொல்லியாக அவரது திறமையை வியந்து பாராட்டினேன். ‘1770’ படத்தின் மிக முக்கியமான அம்சம் விஜயேந்திர பிரசாத் அவர்கள் எழுதிய மந்திர வார்த்தைகளில் அடங்கி இருக்கிறது. அவரின் எழுத்து, மொழிகளின் எல்லைகளைக் கடந்து, அனைத்து தரப்பு பார்வையாளர்களுடன் எளிதாக இணைகிறது. இது போன்றதொரு உணர்ச்சிமிக்க குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக கருதுகிறேன்.” என்றார்.
‘1770’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் உருவாகவிருக்கிறது. நவராத்திரி திருவிழா தொடங்குவதற்கு முன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. தீபாவளி பண்டிகையின் போது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே படத்தின் இயக்குநரான அஷ்வின், தன்னுடைய குழுவுடன் இணைந்து காலகட்டத்தை ஆராய்ந்து, தனித்துவமான காட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | INDIAN 2: இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாள்.. தனக்கேயுரிய பாணியில் வாழ்த்திய உலகநாயகன் கமல்ஹாசன்!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- SS Rajamouli Latest Viral Pic In Paris Animation Studio
- Ranbir Kapoor Ss Rajamouli And Ayan Mukerji In Vizag For Brahmastra
- Ram Charan, Jr NTR, SS Rajamouli's RRR Hindi Version OTT Premiere Preponed
- SS Rajamouli RRR Movie OTT Release From May 20th
- SS Rajamouli RRR Movie OTT Release From May 20th
- Mahesh Babu Hinted About His Collaboration With SS Rajamouli
- SS Rajamouli's Throwback Video Heaping Praises On Yash's Father Is Going Viral
- SS Rajamouli Applauded Yash Father Throwback
- Biggboss Tharshan Losliya Koogle Kuttappa Song Release By SS Rajamouli
- Biggboss Tharshan Losliya Koogle Kuttappa Song Release By SS Rajamouli
- Alia Bhatt About SS Rajamouli's RRR Controversy Ft Jr NTR, Ram Charan
- Director Shankar Praises SS Rajamouli After Watching RRR
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴LIVE: DHANUSH-ஐ கொண்டாடும் HOLLYWOOD! 🔥தமிழர்களை தலை நிமிர வைத்த தருணம் ❤️ The Gray Man Premiere
- Pearle-യുടെ Rapid Fire Round-ൽ കുടുങ്ങിയ Ram Charan-ഉം NTR-ഉം 😅👌
- Ram Charan Mass Dance With Sivakarthikeyan On Stage🤩 Ram Charan On RRR Mode🔥 Behindwoods Gold Medals
- தங்க நாணயங்கள் JACK POT பெற்ற RRR பட Technicians 💥
- ராஜமௌலியை மிரட்டிய சிறுமி.. புகழ்ந்து தள்ளிய RRR இசையமைப்பாளர்.. "Kommpa Unkada"😍
- Pearle-യുടെ Rapid Fire Round-ൽ കുടുങ്ങി🤣 Ram Charan-ഉം NTR-ഉം😅👌
- RRR കാണാൻ Pearle-യും Srinish-ഉം ഒരുമിച്ച് എത്തിയപ്പോൾ... | RRR Celebrity Show
- ഈ പേര് ഞാൻ ഇനി ഒരിക്കലും മറക്കില്ല ഉറപ്പ് !! 🥰😍| Pearle With RRR Team
- வீதியை கைப்பற்றிய ராமர்கள்.. RRR-ஐ தரிசிக்க புல்லட் யாத்திரை..! ஸ்தம்பித்து போன ஹைதராபாத்
- Rajamouli RRR-ലൂടെ വീണ്ടും ഞെട്ടിച്ചു..🔥🔥 | RRR First Half Spot Review & Audience Reaction
- 1000-க்கும் மேற்பட்ட ராமர்கள்.. மிரண்டு போன ராஜமௌலி..! மாஸ் சம்பவம்
- RRR-ന് 1000 കോടി ഉറപ്പ്..🔥🔥 | ഹരം കൊണ്ട് ആരാധകർ | RRR FDFS