IRAVIN NIZHAL
www.garudabazaar.com

ரன்பீர் கபூருடன் 'Cook With Comali' பிரபலம்.. இணையத்தில் வைரலாகும் Photo.. "சும்மா பட்டைய கெளப்புறாங்களே"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் 'ஷம்ஷேரா' திரைப்படம், ஜூலை 22ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

sivaangi pic with ranbir kapoor for shamshera promo

இந்த படத்தில், ரன்பீர் கபூருடன் சஞ்சய் தத், வாணி கபூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை கரண் மல்ஹோத்ரா இயக்கி உள்ளார். இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அது மட்டுமில்லாமல், ஹிந்தி மொழியில் தயாராகும் இந்த திரைப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆக உள்ளது.

ரன்பீர் கபூர், டிடியின் ப்ரோமோ வீடியோ

இதனைத் தொடர்ந்து, ஷம்ஷேரா திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இந்த படத்தின் தமிழ் ப்ரோமோஷன் தொடர்பாக, நடிகர் ரன்பீர் கபூர், தமிழில் பிரபல தொகுப்பாளினியான திவ்ய தர்ஷினி கலந்து கொண்ட ப்ரோமோ வீடியோ ஒன்று, அதிக அளவில் வைரலாகி இருந்தது.

அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஒருவரும், ரன்பீர் கபூருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென பிரத்யேக ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அது மட்டுமில்லாமல், இந்த நிகழ்ச்சியின் மூலம், ஏராளமானோர் மிக பெரிய அளவில் பிரபலம் அடையவும் செய்தனர்.

ரன்பீருடன் குக் வித் கோமாளி பிரபலம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளியாக வந்த புகழ், தற்போது அடுத்தடுத்து சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதே போல, போட்டியாளர்களாக வந்த அஸ்வின், பவித்ரா, தர்ஷா குப்தா உள்ளிட்டோருக்கும் நிறைய திரைப்பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில், சூப்பர் ஸ்டார் சிங்கர் மூலம் பிரபலம் ஆகி, கோமாளியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தவர் சிவாங்கி. இவரது குழந்தைத் தனமான பேச்சும், சிரித்துக் கொண்டே எப்போதும் இருப்பதும் தான், பலரையும் கவர்ந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்திலும் சிவாங்கி நடித்திருந்தார். இந்நிலையில் தான், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் ஷம்ஷேரா திரைப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பான ஷூட் ஒன்றிலும் அவர் கலந்து கொண்டுள்ளார். அப்போது, ரன்பீருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த சிவாங்கி, இது தொடர்பான வீடியோவை அனைவருக்கும் காண்பிக்க ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரன்பீர் கபூர் மற்றும் சிவாங்கி இணைந்திருக்கும் புகைப்படங்களும் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

sivaangi pic with ranbir kapoor for shamshera promo

People looking for online information on Cook with comali, CWC 3, Ranbir Kapoor, Shamshera, Sivaangi Krish will find this news story useful.