www.garudabazaar.com

CONNECT பட டிரெய்லரை பார்த்து ஜான்வி கபூர் சொன்ன விஷயம்.. பதிலளித்த விக்னேஷ் சிவன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நயன்தாரா நடிக்கும் Connect படத்தின் டிரெய்லரை ஜான்வி கபூர் பாராட்டியுள்ளார்.

Janhvi Kapoor Reacts to Nayanthara Connect Movie Trailer

பதான் படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. தீபிகா படுகோனேக்கு ஆதரவாக ட்வீட் செய்த பிரகாஷ் ராஜ்!

நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டில் வெளியான 'மாயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். 'மாயா' நயன்தாராவின் 50வது படமாகும், மேலும் இது தமிழ் சினிமாவின் சிறந்த திகில் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

2015-ல் அதிக வசூல் செய்த தமிழ் படங்களில் மாயாவும் ஒன்று. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய S R பிரபு தயாரித்து இருந்தார்.

Janhvi Kapoor Reacts to Nayanthara Connect Movie Trailer

பின்னர் 2018 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய படம் ‘இறவாக்காலம்’.   அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு டாப்சி நடிப்பில் கேம் ஓவர் படத்தை இயக்கினார்.இந்தப் படத்தில், மர்மமான ஊடுருவல்காரர்களிடமிருந்து தனது வீட்டைப் பாதுகாக்கும் PTSD உடைய பெண்ணாக டாப்ஸி நடித்திருப்பார். அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை YNOT ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்தது.

Janhvi Kapoor Reacts to Nayanthara Connect Movie Trailer

தற்போது அஸ்வின் சரவணன் நயன்தாரா நடிப்பில் கனெக்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அனுபம் கேர், வினய், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியானது. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் 22.12.2022 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படம் 99 நிமிடங்கள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைவேளை இல்லாத தமிழ்த் திரைப்படமாக இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Janhvi Kapoor Reacts to Nayanthara Connect Movie Trailer

இந்த படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியாகி உள்ளது. ஹாரர் வகைமையில் இந்த டிரெய்லர் வெளியானது. சத்யராஜ், அனுபம் கேர், வினய் ஆகியோர் டிரெய்லரில் நயன்தாராவுடன் சேர்ந்து தோன்றியுள்ளனர்‌. இந்த டிரெய்லர் குறித்து நடிகை ஜான்வி கபூர், "இந்த படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன். கனெக்ட் டிரெய்லர் அருமையாக உள்ளது" என விக்னேஷ் சிவனை டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.

Janhvi Kapoor Reacts to Nayanthara Connect Movie Trailer

இதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன், "நன்றி ஜான்வி..‌உங்களுக்கு டிரெய்லர் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது." என குறிப்பிட்டுள்ளார்.

Also Read | தனி விமானத்தில் ரஜினியுடன் செல்ஃபி எடுத்த A.R. ரஹ்மான்.. கூட இவங்க வேற இருக்காங்க 😍

தொடர்புடைய இணைப்புகள்

Janhvi Kapoor Reacts to Nayanthara Connect Movie Trailer

People looking for online information on Connect, Janhvi Kapoor, Nayanthara, Nayanthara Connect Movie Trailer will find this news story useful.