www.garudabazaar.com

மணிரத்னம், அட்லி, மிஸ்கின் உள்ளிட்ட இயக்குநர்களின் திடீர் சந்திப்பு.. எதற்காக?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக அறியப்படும் இயக்குநர் ஷங்கரின் 25 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் ஒன்று கூடி விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

Tamil Cinema filmmakers celebrating 25 years of Director Shankar at Mysskin's office

‘ஜெண்டில்மேன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கடந்த 1993-ல் அறிமுகமானவர் இயக்குநர் ஷங்கர். முதல் திரைப்படத்திலேயே, காமெடி, காதல், சோசியல் மெசேஜ், இசை என அனைத்திலும் இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

திரைப்படத்தின் கதை மட்டுமல்லாமல் படத்திற்கு படம் தொழில்நுட்ப ரீதியிலும் மேம்பட்ட சாதனங்களை பயன்படுத்தி தமிழ் சினிமாவின் தரத்தை உலக அரங்கிற்கு கொண்டு சேர்த்ததில் இயக்குநர் ஷங்கருக்கு பெரும் பங்கு உள்ளது.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கரின் 25 ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் வகையில் இயக்குநர் மிஸ்கின் தனது அலுவலகத்தில் ஒரு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த பார்ட்டியில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், மிஸ்கின், மோகன்ராஜா, கவுதம் மேனன், லிங்குசாமி, பா.ரஞ்சித், அட்லி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.

இதில் கலந்துக் கொண்ட அனைத்து இயக்குநர்களும் நீல நிறத்தில் டி-ஷர்ட் அணிந்திருந்தனர். அதில் S25 என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இயக்குநர் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.