சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பாம்புக்கு முத்தம் கொடுத்த துருவ் விக்ரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் நடித்த ‘படையப்பா’ திரைப்படத்தில் புத்திற்குள் இருந்து பாம்பை எடுத்து முத்தம் கொடுக்கும் காட்சி மிகவும் பிரபலம். அதே ஸ்டைலில் படத்திற்காக அல்லாமல் நடிகர் துருவ் விக்ரம் நிஜ பாம்பை கழுத்தோடு சுற்றி முத்தம் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

Adhitya Varma hero Dhruv Vikram kisses Snake in Rajinikanth style

‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.  இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர்  கிரீஸய்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.

ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் நாளை (அக்.22)ம் தேதி ரிலீசாகிறது. இதையடுத்து, இப்படம் வரும் நவ.8ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்நிலையில், நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘6 அடி மலைப்பாம்பு ஒன்றை தனது கழுத்தில் சுற்றியபடி அதன் தலையில் பாசத்தோடு முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். நடிகர் சீயான் விக்ரமிற்கு பறவைகள், விலங்குகள் மீது அதிக ஈடுபாடும் ஆர்வமும் இருப்பதை பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

அவரை போலவே சிறிதும் பயமின்றி, ஆளையே விழுங்கும் 6 அடி மலைப்பாம்புக்கு துருவ் விக்ரம் முத்தும் கொடுக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Snakes in Bali 🐍

A post shared by த்ருவ் (@dhruv.vikram) on