"ஆர்ட்டிக்கிள் 15" ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்தாரா அஜித் ? விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Sep 04, 2019 03:48 PM
தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை மக்களிடம் நல்ல வெற்றியைப் பெற்றது. அடுத்ததாக அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தலா 60’ திரைப்படத்தின் அறிவிப்பை தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டரில் சமீபத்தில் வெளியிட்டார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தல 60 அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என்று ஏற்கனவே Behindwoods தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் அஜித் தல60 படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என்னும் தகவலை Behindwoods தளத்தில் வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில். சமீபத்தில் பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ’ஆர்ட்டிக்கிள் 15’என்ற படத்தின் ரீமேக்கில் தல அஜித் நடிக்க விரும்புவதாக செய்திகள் பல ஊடகங்களில் வெளியானது. இதுதொடர்பாக எங்களது நெருங்கிய கோலிவுட் வட்டாரங்களை அணுகியபோது அவ்வாறு வெளியான தகவல் முற்றிலும் நம்பகத்தன்மை என்று தெரிவித்துள்ளனர்.