'பிகில்' சிங்கப் பெண்... இந்திரஜாவின் நியூ லுக் ஃபோட்டோ - ''எல்லோரையும் ஷாக் பண்ணுங்க''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருந்த 'பிகில் திரைப்படம் கடந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு நல்ல வரவேற்பை பெற்றது. பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையப்படுத்திய இந்த படம் உருவாகியிருந்தது.

இந்த படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இந்திரஜா. இவர் நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், தனது ஸ்டைலிஷான புகைப்படம் பகிர்ந்த அவர், நடத்தி காட்டுங்க, அதிர்ச்சியாக்குங்க. நான் நம்பியது சத்யா அண்ணாவின் விஷன். இந்த மாற்றத்திற்கு  ஒட்டுமத்த குழுவும் என் மேல் வைத்திருந்த நம்பிக்கை தான் காரணம்.

இந்த நியூ லுக்கிற்காக உழைத்த ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி'' என்று தெரிவித்துள்ளார். இந்த ஃபோட்டோ ஷூட்டிற்காக இந்திரஜாவின் காஷ்டியூமை சத்யா என்ஜே வடிவமைத்துள்ளார். இவர் பைரவா மற்றும் தெறி படங்களுக்கு தளபதி விஜய்யுடன் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor