ஃபேவரைட் ஹீரோ விஜய்.. ஃபேவரைட் படம் அஜித்துடையது.! - விக்ரமின் கோப்ரா பட இயக்குநர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அஜய் ஞானமுத்து விஜய், மற்றும் அஜித் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

விஜய், அஜித் பற்றி அஜய் ஞானமுத்து கருத்து | ajay gnanamuthu opens about vijay and ajith

டிமான்டி காலனி படத்தின் மூலம் அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. திகில் திரைப்படமான இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இவர் அதர்வா, நயன்தாரா ஆகியோரை வைத்து இமைக்கா நொடிகள் என்கிற படத்தை இயக்கினார். இத்திரைப்படமும் ஹிட் அடித்தது. இவர் தற்போது விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். இதில் இர்ஃபான் பதான், ஶ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் அவரது ஃபேவரைட் ஹீரோ பற்றி கேட்டதற்கு விஜய் எனக்கூறிய அவர், ''அவர் என் தலைவன். சிலரை  பற்றி வார்த்தைகளில் விவரிக்க முடியாது'' எனக்கூறியுள்ளார். மேலும் விஜய்யின் ஃபேவரைட் படத்துக்கு சச்சின் என பதிலளித்த அவர், 2019-ன் ஃபேவரைட் படம் என்னவென்ற கேள்விக்கு அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை என பதிலளித்தார். 

Entertainment sub editor