www.garudabazaar.com
iTechUS

நண்பேன்டா.. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு.. அசீம் & மணி சந்திப்பு! வைரலாகும் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மணிகண்ட ராஜேஷ் & டைட்டில் வின்னர் அசீம் சந்தித்துள்ளனர்.

BiggBoss Season 6 Winner Azeem Mankanta Rajesh meeting photos

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | "வருங்கால மனைவி எப்படி எல்லாம் இருக்கணும்?".. விக்ரமன் போட்ட லிஸ்ட்.. Exclusive!!

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்,  கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, ஈழத்தை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

BiggBoss Season 6 Winner Azeem Mankanta Rajesh meeting photos

Images are subject to © copyright to their respective owners.

இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.

சமீபத்தில் நடந்த இறுதி போட்டியில் முதல் நபராக ஷிவின் எலிமினேட் ஆனார். பின்னர் விக்ரமன் & அசீம் இடையே ஒருவர் பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அசீம் இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால் அசீம் அறிவிக்கப்பட்டார். அசீம்க்கு பரிசாக மாருதி சுசூகி பிரேஸா காரும், 50 லட்ச ரூபாய் காசோலை, வெற்றிக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

BiggBoss Season 6 Winner Azeem Mankanta Rajesh meeting photos

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் மணிகண்ட ராஜேஷ் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் சீசன் 6 வெற்றியாளர் அசீமை சந்தித்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, "இறுதியாக என் நண்பனுடன் போட்டோ எடுத்து கொண்டேன்" என கூறியுள்ளார்.

Also Read | "ஃப்ரண்ட போல யாரு மச்சான்..".. ராமுக்கு விக்ரமன் கொடுத்த செம சர்ப்ரைஸ்..

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Season 6 Winner Azeem Mankanta Rajesh meeting photos

People looking for online information on Azeem, Azeem Mankanta Rajesh meeting, BiggBoss Season 6 Winner Azeem, Mankanta Rajesh will find this news story useful.