www.garudabazaar.com
iTechUS

தளபதி 67 படத்தில் விஜய்க்கு மகளாக பிரபல காமெடி நடிகரின் மகளா?.. யார் இவங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி 67 படத்தில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Actor Arjunan Daughter Iyal doing a Role in Thalapathy 67

Images are subject to © copyright to their respective owners

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  நேற்று முன்தினம் வெளியானது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்திரன் பணிபுரிகிறார்.

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.

Actor Arjunan Daughter Iyal doing a Role in Thalapathy 67

Images are subject to © copyright to their respective owners

இந்த படத்தின் படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள். இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.

இந்த படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தளபதி 67 படத்தின் பூஜை வீடியோவை பகிர்ந்து பிரபல நகைச்சுவை நடிகர் அர்ஜூனன் ட்விட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "மகிழ்ச்சியுடனும் பெருமிதத்துடனும் இதை அறிவிக்கிறேன். எனது மகள் இயல் தளபதி 67 படத்தில் நடிக்கிறார். உங்களது அன்பும் ஆசிர்வாதமும் அவருக்கு வேண்டும்." என ட்வீட் செய்துள்ளார். நடிகர் துல்கர் சல்மானும் இயலை வாழத்தியுள்ளார்.

Actor Arjunan Daughter Iyal doing a Role in Thalapathy 67

Images are subject to © copyright to their respective owners

நடிகர் அர்ஜூனன், காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், அரிமா நம்பி, கப்பல், யான், அவியல், கணம், வனமகன், நித்தம் ஒரு வானம், O2, உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவருடைய மகள் இயல் தளபதி 67 படத்தில் குழந்தை நட்சத்திரமாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இயல், நடிகர் விஜய்யின் மகளாக நடிப்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Arjunan Daughter Iyal doing a Role in Thalapathy 67

People looking for online information on Lokesh Kanagaraj, Thalapathy67, Vijay will find this news story useful.