www.garudabazaar.com

"எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல.. வெளியே போய்டணும்".. திரும்பவும் புலம்பிய தனலட்சுமி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

BiggBoss 6 Tamil Dhanalakshmi said she is going to walks out

Also Read | "2 வாரமா கேக்குறேன்ல".. ஃபோன் நம்பர் கேட்டு அடம்பிடித்த ராபர்ட் .. ரச்சிதா சொன்ன பதில்.. bigg boss 6 Tamil

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

BiggBoss 6 Tamil Dhanalakshmi said she is going to walks out

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து, கடந்த வார இறுதியில் நிவாஷினி வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டினுள் கோர்ட் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதன்படி, பிக்பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் நீதிமன்றம் என்ற பெயரில் இந்த டாஸ்க் ஆரம்பமாகும் நிலையில், ஒவ்வொருவராக தங்களது வழக்கு என்ன என்பதை மெயின் டோர் கேமரா முன்பு பதிவு செய்யலாம். இதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபருக்காக வழக்கறிஞரை தேர்வு செய்து அவரது வழக்கை தயார் செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

BiggBoss 6 Tamil Dhanalakshmi said she is going to walks out

முன்னதாக, இந்த வாரத்துக்கான பிக்பாஸ் வீட்டு தலைவராக மைனா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கால்பந்து போட்டியின் மூலம் தலைவர் தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. இதில் போட்டியிட்ட தனலட்சுமி இதுகுறித்து கோர்ட் டாஸ்க்கில் வழக்கு ஒன்றையும் தொடுத்திருந்தார். இது ஒருபக்கம் இருக்க, தனலட்சுமி - ஆயிஷா இடையேயான உரையாடல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிஷாவிடம் பேசும் தனலட்சுமி,"எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல. இந்த வாரம் பொறுமையா இருந்துட்டு வெளியே போகணும்" என்கிறார். அப்போது ஆயிஷா, ஏன் எனக்கேட்க "எல்லாம் ஒவ்வொரு மாதிரி இருக்குங்க, ஒருத்தவங்களை பத்தி தப்பா பேசுதுங்க. மறுபடியும் அவங்ககிட்டேயே போய் பேசிட்டு நம்மகிட்ட மூஞ்சியை காண்பிக்குறாங்க" என்கிறார்.

BiggBoss 6 Tamil Dhanalakshmi said she is going to walks out

இதைத் தொடர்ந்து பேசிய ஆயிஷா,"நீ யார்கிட்டயும் ரொம்ப வச்சுக்காத, நீ எதுக்கு வந்தியோ அதுல மட்டும் கவனமா இரு" என அட்வைஸ் செய்கிறார்.

Also Read | ஜனனி - விக்ரமன் வழக்கில் அசீமின் பரபர வாதம்.. இன்றைய பிக்பாஸில்..!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss 6 Tamil Dhanalakshmi said she is going to walks out

People looking for online information on Ayesha, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmi, Vijay Television, Vijay tv will find this news story useful.