www.garudabazaar.com

"நெல்சன் அண்ணா அடிக்கடி ஒன்னு சொல்வாரு".. டாடா பட வெற்றி விழாவில் கவின் நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

“டாடா” படத்தின் நன்றி அறிவிப்பு வெற்றி விழாவில் நடிகர் கவின்  நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

BiggBoss Kavin about His film Dada and Director Nelson

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LEO படத்தின் காஷ்மீர் ஷூட்டிங்.. காதலர் தினத்தில் த்ரிஷா பகிர்ந்த சூப்பர் போட்டோஸ்!

ரொமாண்டிக் திரைப்படமாக 'டாடா' திரைப்படம் கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் S.அம்பேத் குமார்  தயாரிப்பில் 'டாடா' படத்தினை அறிமுக இயக்குனர் கணேஷ் K பாபு இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  கவின் மற்றும் அபர்ணா தாஸூடன்  K.பாக்யராஜ், ஐஸ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ ஹரிஷ்,  பிரதீப் ஆண்டனி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

BiggBoss Kavin about His film Dada and Director Nelson

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார், கதிரேஷ் அழகேசன், எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார், சண்முக ராஜ் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில்  நடந்தது. இதில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

BiggBoss Kavin about His film Dada and Director Nelson

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்வு சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய நடிகர் கவின் படம் உருவான சூழல், தற்போது படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேசினார். கவின் பேசியதாவது, "இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அண்ணா ஒரு விஷயம் அடிக்கடி சொல்லுவார். ஒரு படம் என்பது நாம் நடிக்க வர்றோம். ஒரு கதை சொல்ல வர்றோம். நம்மல நம்பி ஒருத்தர் (தயாரிப்பாளர்) காசு முதலீடு செய்றார்ல. அவருக்கு நல்லபடியாக லாபம் சேரும் படமாக இருக்கனும். அது எப்பவும் நம்ம மனசுல இருக்கனும்னு நெல்சன் அடிக்கடி சொல்லுவார். இந்த படத்தை என் நண்பர் மணிக்கு சமர்ப்பிக்கிறேன். அவன் இப்போ உயிரோடு இல்லை. நான் முதன்முதலில் டிவில வரும்போது விசில் அடிச்சவன். இப்போ அவன் இருந்தா ரொம்ப சந்தோஷப்படும் முதல் ஆள் அவனா தான் இருக்கும். அதனால் தான் இந்த படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் மணினு இயக்குனர்க்கிட்ட கேட்டு மாத்தி வச்சோம்." என நடிகர் கவின் பேசினார்.

Also Read | "நீதான் என் உலகம், சூரியன் எல்லாம்".. காதலர் குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் வைரல் பதிவு!

"நெல்சன் அண்ணா அடிக்கடி ஒன்னு சொல்வாரு".. டாடா பட வெற்றி விழாவில் கவின் நெகிழ்ச்சி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

BiggBoss Kavin about His film Dada and Director Nelson

People looking for online information on Biggboss Kavin, Dada, Kavin, Kavin Dada Movie, Nelson will find this news story useful.