www.garudabazaar.com

அட.. பிக்பாஸ் ஆரவ் இப்படி செஞ்சதுக்கு காரணம்.., என்ன தெரியுமா..?!! - அவரே சொல்றாரு பாருங்க.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆரவ் தனது திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ஆரவ் வெளியிட்ட புதிய வீடியோ | Biggboss fame arav shares a dance video of his wedding

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். விளம்பர மாடலான ஆரவ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி', விஜய் ஆண்டனியுடன் 'சைத்தான்' உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர், சரண் இயக்கத்தில் 'மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்', 'ராஜ பீமா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ஆரவ் வெளியிட்ட புதிய வீடியோ | Biggboss fame arav shares a dance video of his wedding

இந்நிலையில் நடிகர் ஆரவ்-க்கும் நடிகை ராஹி என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு நேரில் வாழ்த்தினார்கள். இதை தொடர்ந்து, திருமணத்தன்று நடைபெற்ற நடன நிகழ்வில் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆரவ் நடனமாடும் வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ''நான் யாரை விடவும் சிறப்பாக ஆட வேண்டும் என ஆடுவதில்லை. என்னை விட சிறப்பாக ஆட வேண்டும் என்றே ஆடுகிறேன்'' என பதிவிட்டுள்ளார். 

 

அட.. பிக்பாஸ் ஆரவ் இப்படி செஞ்சதுக்கு காரணம்.., என்ன தெரியுமா..?!! - அவரே சொல்றாரு பாருங்க.!! வீடியோ

ஆரவ் வெளியிட்ட புதிய வீடியோ | Biggboss fame arav shares a dance video of his wedding

People looking for online information on Aarav, BiggBoss Arav Wedding, Raahei will find this news story useful.