www.garudabazaar.com

கௌதம் மேனன் பட ஹீரோயினை மணக்கும் பிக்பாஸ் ஆரவ்.!! - திருமணம் பற்றி வந்த தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு பிரபலமடைந்த ஆரவ்-ன் திருமணம் குறித்து தகவல் வந்துள்ளது. 

ஹீரோயினை மணக்கும் ஆரவ் | Biggboss Aarav to marry this young actress of tamil cinema

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆரவ், இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். விளம்பர மாடலான ஆரவ், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் இயக்குநர் மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி', விஜய் ஆண்டனியுடன் 'சைத்தான்' உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர், சரண் இயக்கத்தில் 'மார்கெட் ராஜா எம்பிபிஎஸ்', 'ராஜ பீமா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆரவ்வின் திருமணம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இவர் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி வரும் ராஹீ என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இவர் கௌதம் மேனன் இயக்கிய ஜோஷ்வா திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இருவரும் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது. 

 

கௌதம் மேனன் பட ஹீரோயினை மணக்கும் பிக்பாஸ் ஆரவ்.!! - திருமணம் பற்றி வந்த தகவல். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

ஹீரோயினை மணக்கும் ஆரவ் | Biggboss Aarav to marry this young actress of tamil cinema

People looking for online information on Aarav, Biggboss, Joshua, Raahei will find this news story useful.