'மறுபடியும் பிக்பாஸா..? கண்டிப்பா முடியாது' - பிக்பாஸ் நடிகை இதில் உறுதியா இருக்காங்க.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிக்பாஸ் அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ராஜாராணி படத்தின் மூலம் ஒரு காட்சியில் நடித்து அறிமுகமானார் சாக்ஷி அகர்வால். இவர் காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். இதையடுத்து பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று இவர் மேலும் பிரபலமானார். இவரின் நடிப்பில் ஆயிரம் ஜென்மங்கள், சின்ட்ரல்லா உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மீண்டும் பிக்பாஸ் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, ''பிக்பாஸ் எனக்கு ஒரு நல்ல அனுபவம், அங்கு நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது, ஆனால் மீண்டும் கலந்து கொள்வது என்றால், கண்டிப்பாக முடியாது' என பதில் அளித்துள்ளார்.