விக்ரமுக்கு சூப்பர் பிறந்தநாள் வாழ்த்து கொடுத்த வடிவேலு..! அதுவும் எப்படின்னு பாருங்க.!!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விக்ரமின் பிறந்தநாளுக்கு வடிவேலு செம சூப்பரான வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் சீயான் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விக்ரம். தில், தூள், சாமி, அந்நியன் என பல சூப்பர் ஹிட் படங்களை இவர் கொடுத்துள்ளார். மேலும் தனது வித்தியாசமான நடிப்பால் இவர் ரசிகர்களை எப்போதுமே ஆச்சர்யத்தில் வைத்துள்ளார். இன்று விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு சூப்பரான வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார். ''பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்ரம், வாழ்க பல்லாண்டு' என பதிவிட்டுள்ள அவர், அத்துடன் இருவரும் சேர்ந்து நடித்த கிங் படத்தில் இடம்பெற்ற காமெடியை பகிர்ந்துள்ளார். தனது சூப்பர் காமெடியுடன் வடிவேலு விக்ரமுக்கு வாழ்த்து கூறியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் சேர்ந்து மஜா, கிங், அருள் உள்ளிட்ட படங்களில் காமெடியில் கலக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்ரம் வாழ்க பல்லாண்டு 💐 pic.twitter.com/F5y2agM1CK
— Actor Vadivelu (@VadiveluOffl) April 17, 2020