மாஸ்டர் விஜய்... நண்பர் அஜித்..! இதை சொல்லும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா..?!
முகப்பு > சினிமா செய்திகள்மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் அஜித் குறித்து பேசிய விஜய் பற்றி பிக்பாஸில் பிரபலமடைந்த நடிகை கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். இதனிடையே நேற்று மாஸ்டர் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெற்றது.
இதில் விஜய் கருப்பு நிற கோட் சூட் உடையில் வந்திருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, 'ஒரு சேஞ்சுக்கு நண்பர் அஜித் மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கேன்' என தெரிவித்தார். இந்நிலையில் இதுகுறித்து பிக்பாஸ் போட்டியில் பங்கேற்ற காஜல் பசுபதி ட்விட்டியுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'அந்த ஒரு மொமன்ட், ஒரு சேஞ்சுக்காக என் நண்பர் அஜித் மாதிரி டிரஸ் பண்ணி வந்துருக்கேன் என தளபதி சொல்லும் போது, அவரை மேலும் லவ் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட். லவ் யூ' என அவர் பதிவிட்டுள்ளார். காஜல் மட்டுமின்றி, விஜய் மற்றும் அஜித் ரசிகர்களும் விஜய் பேசியதை வெகுவாக ரசித்து வருகின்றனர்.
Aweee 😘😘😘#Master #kuttistory aka #kuttikadha 😘😘😘😘
That moment when #thalapathy said, "For a change , yen nanbar #Ajith maari dress panni vandu irukan ..." I started luvin him even more. He's such a sweetheart.
Luvyo Ma Luv 😘😘😘 pic.twitter.com/Q8ujJK28fJ
— Kaajal Pasupathi (@kaajalActress) March 15, 2020