'உங்க பேருதான் என் எக்ஸ் லவ்வருக்கும்..!" இப்படி ஒரு கேள்விக்கு பிக்பாஸ் நடிகையின் செம பதில்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை பிந்து மாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகரின் கேள்விக்கு செம ரிப்ளை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் பிந்து மாதவி. கேடிபில்லா கிள்ளாடி ரங்கா, தேசிங்கு ராஜா என இவர் நடித்த படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தற்போது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் யாருக்கும் அஞ்சேல் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிந்து மாதவி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர், ''என் எக்ஸ் லவ்வர் பெயரும் பிந்துதான்'' என பதிவிட்டார். இதற்கு பதிலளித்த பிந்து மாதவி, ''அந்த பெயரிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்குமாறு சொல்லி கொள்கிறேன்'' என கிண்டலாக ரிப்ளை கொடுத்துள்ளார்.
Tags : Bindu Madhavi, Yarukkum Anjael, BIGGBOSS TAMIL