‘கவனமா Sketch போட்டு தான் தூக்கணும்..’ - கிருஷ்ணாவின் ‘கழுகு2’ ஸ்னீக் பீக் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 29, 2019 07:28 PM
நடிகர் கிருஷ்ணா, பிந்து மாதவி ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘கழுகு 2’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் வெளியான படம் கழுகு. இந்தப் படத்தில் தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கொடைக்கானல் பகுதியில் தற்கொலை செய்பவர்களின் உடலை மீட்டெடுக்கும் பணி செய்பவர்களின் கதையை எதார்த்தமாக பதிவு செய்த ‘கழுகு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘கழுகு 2’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தையும் சத்ய சிவாவே இயக்கியுள்ளார். இதில், கிருஷ்ணா, காளி வெங்கட், பிந்துமாதவி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள ‘கழுகு 2’ திரைப்படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் வரும் ஆகஸ்ட்.1ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
‘கவனமா SKETCH போட்டு தான் தூக்கணும்..’ - கிருஷ்ணாவின் ‘கழுகு2’ ஸ்னீக் பீக் வீடியோ வீடியோ