bigg boss 6 tamil : "அசீம் Mind Game ஆடுறாப்ள".. ராபர்ட், ரச்சிதா பேசிகிட்டது என்ன..? சூடுபிடிக்கும் பொம்மை Task
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Also Read | “கார்த்தி 7 மணி நேரம் பாடுனாரு.. பாதி மியூசிக் மித்ரன் தான்”.. சர்தார் சீக்ரெட்ஸ் சொன்ன ஜிவி.!
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்த முறை பிக் பாஸ் வீட்டில் முதல் 40 நாட்களுக்கு நடக்க வேண்டிய சண்டைகள் அனைத்தும் முதல் வாரத்திலேயே நடந்து விட்டதாக கமல்ஹாசன் கடந்த வாரத்தில் தெரிவித்து இருந்தார்.
அதன்படி அசிம் ஆயிஷா சண்டை, தனலட்சுமி ஜனனி சண்டை, ஜனனி ஆயிஷா சண்டை, விக்ரமன் அசீம் சண்டை என பல விதமான சண்டைகள் பலவிதமான டாஸ்குகள் விஸ்வரூபம் எடுத்தன. இதன் தொடர்ச்சியாக தற்போது பொம்மை டாஸ்க் உருவெடுத்திருக்கிறது. இதுவரை அமைதியாக இருந்த மணிகண்டன் ராஜேஷூம் ஒரு கணம் ஆவேசமானதை காண முடிந்தது.
இதில் இரண்டு அணிகளாக பிரிந்து தத்தம் பொம்மையினை டால் தொட்டியில் இருந்து டால் ஹவுஸில் சேர்க்கக் கூடிய டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. இதில் எதிர் அணியினரின் பொம்மையை எடுத்துக்கொண்டும், அவர்களின் பொம்மையை டால் ஹவுஸில் கொண்டு சேர்ப்பதை தடுத்துக் கொண்டும் இந்த கேமை ஆட முடியும். இதில் ரச்சிதா, ராபர்ட் உள்ளிட்ட டீம் அசீமை பற்றி பேசிக்கொள்ளும் பேச்சு பரபரப்பாகியுள்ளது. அதன்படி அசீம்தான் தன்னுடைய பொம்மையை எடுத்து ஆயிஷாவிடம் கொடுத்ததாக ரச்சிதா கூறுகிறார். தொடர்ந்து ராபர்ட்டும் ரச்சிதாவும் அசீம் மைண்ட் கேம் ஆடுவதாக குறிப்பிடுகின்றனர்.
கடந்த வாரங்களை பொறுத்தவரை அசீம் - ஆயிஷா சண்டை பிக்பாஸ் வீட்டில் பெரிதாக வெடித்தது. ரேங்கிங் டாஸ்கில் நடந்த இந்த பிரச்சனையில், அசீம் மற்றும் ஆயிஷா பிறகு சமாதானம் ஆனாலும், வார இறுதியில் கமல்ஹாசன் முன்னிலையில் அசீம், தன் தவறுக்கு மன்னிப்பு கோரி வருத்தம் தெரிவித்தார். இதனிடையே, “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்கிற இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தடுக்கும் பொருட்டு தள்ளுமுள்ளுவில் ஈடுபடக்கூடிய காட்சிகளும் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Also Read | Bigg boss 6 tamil : தீவிரமாகும் Doll Task.. அச்சோ தலையில அடிப்பட்ருச்சு.. பதறி ஓடிய ஹவுஸ்மேட்ஸ்.. !
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Sherina Got Hit In The Doll Task Bigg Boss 6 Tamil
- Let Kamal Sir Release Footage Dhanalakshmi Bigg Boss 6 Tamil
- Bigg Boss Season 5 Bommai Task Memories Bigg Boss 6 Tamil
- Ayesha Got Stuck In Bomma Task Bigg Boss 6 Tamil
- Vijay Tv Bigg Boss 6 Tamil Bommai Task Janani Punch
- Vijay Tv Bigg Boss 6 Tamil New Promo Bommai Task
- Bigg Boss 6 Tamil Ayesha Health Issue Azeem Helped
- Bigg Boss 6 Tamil Housemates 3rd Week Nomination
- 3rd Week Nomination Process Started Bigg Boss 6 Tamil
- Kamalhassan Announced First Elimination In Bigg Boss 6 Tamil
- GP Muthu Walks Out Of Bigg Boss House In Bigg Boss 6 Tamil
- Kamalhaasan Praises Vikraman In Bigg Boss 6 Tamil
தொடர்புடைய இணைப்புகள்
- 🔴LIVE: BIG FIGHT💥 Dhana VS Azeem "வாடி, போடி சொல்லாதீங்க.." 😡 தோலுரிக்கும் Fatman Review BB6 Day 16
- 🔴OUT: GP Muthu இல்லாத Bigg Boss-ஆ? 😭 Azeem-க்கு RED CARD 🚩 ஆவேசமான மக்கள் | Bigg Boss 6
- BREAKING: Shanti Master EVICTED? 😳 Bigg Boss 6 | GP Muthu
- பாம்பு போல விஷத்த கக்குவது யார்?.. Azeem, Dhanalakshmi கழுத்தை சுற்றும் ஆபத்து 🔥 Bigg Boss
- 🔴 BREAKING: GP Muthu மகன் திடீரென மருத்துவமனையில் அனுமதி! | Bigg Boss 6
- ஆசை மகனை இறுக்கமா கட்டி அணைத்த GP Muthu ❤️ First Post After Bigg Boss
- "Bigg Boss-ல கிடைக்குற புகழ் விட என் புள்ள தான் முக்கியம்" 🥺 விடைபெற்றார் GP Muthu
- "Azeem திட்டினது Vikraman-க்கு Personal-ஆ பாதிச்சிருச்சு"... Bigg Boss Day 13 Highlights
- 🔴 GP Muthu மகனின் உடல்நிலை இப்போ எப்படி இருக்கு?.. Bigg Boss 6
- 🔴 Azeem-க்கு Red Card கொடுத்த House Mates 😳 உச்சத்தை அடைந்த மோதல்
- 🔴 Bigg Boss-ல் இருந்து வெளியேறிய GP Muthu?
- Kamal-இடம் கண்ணீர் விட்டு கதறி அழுத GP Muthu 😭 "என் பிள்ளைங்கள பாக்கணும் சார்" 💔