bigg boss 6 tamil : இதென்ன பிரமாதம்.. 5வது சீசன் பொம்மை டாஸ்கை மறக்க முடியுமா? நினைவலையில் நெட்டிசன்கள்.!
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் பொம்மை டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கேட்பதற்கு ஏதோ பொம்மை டாஸ்க் என்றால், சிறு குழந்தை தனமான டாஸ்க் என நினைத்துவிட முடியாது. முந்தைய சீசன் பொம்மை வரலாற்றை சற்று பின்னோக்கி திரும்பிப் பார்த்தால் அங்கு நடந்ததெல்லாம் களேபரம்தான். ஆம், பிக்பாஸ் 5வது சீசனில் ஒரு சம்பவம் நடந்தது. இந்த டாஸ்கில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் பெயர் தவிர்த்து வேறு பெயர் எழுதி ஒட்டப்பட்ட பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடவேண்டும். அப்படி தாங்கள் எடுத்துச் செல்லும் பொம்மையில் உள்ள பெயருக்குரிய போட்டியாளர் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்கில் இருந்து எலிமினேட் ஆகாமல் காப்பாற்றப்படுவார். அதே சமயம், கடைசியாக வருபவரின் கையில் எந்த பொம்மை இருக்கிறதோ, அந்த பொம்மையில் இருக்கும் பெயருக்குரிய போட்டியாளர் இந்த லக்ஜூரி பட்ஜெட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.
அதாவது இந்த டாஸ்கில், ஒரு போட்டியாளர் நினைத்தால், சக போட்டியாளரை காப்பாற்றவும் முடியும், அதேசமயம், ஒரு குறிப்பிட்ட போட்டியளரின் பெயர் ஒட்டப்பட்ட பொம்மையை எடுத்துக்கொண்டு கடைசியாக ஓடிவந்தோ அல்லது கூடாரத்துக்குள் செல்லாமல், வெளியே நின்றுவிடுவதன் மூலமோ ஒரு போட்டியாளரை வெளியேறச் செய்யவும் முடியும். இதனால் சக போட்டியாளர்களை தடுக்கவும் செய்யலாம் என்கிற யோசனையில் நிரூப் அக்ஷராவை பிடித்து தன் பலத்தால் கட்டி நிறுத்திக்கொண்டார். ஆனால் அவ்வாறு நகர கூட முடியாமல் பிடித்ததற்கு அக்ஷரா எதிர்ப்பு தெரிவிக்க, வருணோ, நிரூப்பின் இந்த செயலால் அதிருப்தி அடைந்ததுடன், அடுத்து நிரூப்பின் பொம்மையை எடுத்துக்கொண்டு கூடாரத்துக்குள் போகாமல் வெளியே நின்று கொண்டார்.
இதனால் வருணை நிரூப் பிடித்து இழுக்க முயற்சிக்க, இருவருக்குள்ளும் வாய்ச்சண்டை, வாக்குவாதங்கள் வலுத்தன. இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். பின்னர் இதுகுறித்த பேச்சில் சிபி நுழைந்து கருத்து சொல்லும்போது, நிரூப்க்கு சப்போர்ட் பண்ணி, அக்ஷராவிடமும் வருணிடமும் கோபமாக பேசிவிட்டார். இதனால் கொந்தளித்த அக்ஷரா, “எப்படி அந்த வார்த்தையை பேசலாம்? என்ன வார்த்தை பேசுகிறான்?” என்று ஆக்ரோஷமாக கத்தத் தொடங்கினார். அனைவரும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அக்ஷரா தனக்கு வந்த உச்சகட்ட கோபத்தில் தன் கையில் இருந்த பொம்மையை தூக்கி அடித்ததுடன், அங்கிருந்த கப்போர்டில் தன் கையை, ஓங்கி அடித்துக் கொண்டார்.
இந்நிலையில் இம்முறை பொம்மை டாஸ்க் எதுவரை போகும் என பார்க்க வேண்டும் என ரசிகர்கள் இணையத்தில் பேசி வருகின்றனர்.