www.garudabazaar.com
iTechUS

விவசாயிகளிடம் கரும்பு வாங்கி 'துணிவு' பொங்கல் வெற்றியை கொண்டாடிய இயக்குனர் H.வினோத்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

H Vinoth Celebrate Blockbuster Thunivu Pongal Sugar Cane

பொங்கலை முன்னிட்டு நேற்று (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படமான 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1 மணிக்கு இந்த திரைப்படம் வெளியானது. ‌

H Vinoth Celebrate Blockbuster Thunivu Pongal Sugar Cane

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் துணிவு படத்தின் இயக்குனர் வினோத், தனது நண்பர் இயக்குனர் சரவணன் உடன் கிராமத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

H Vinoth Celebrate Blockbuster Thunivu Pongal Sugar Cane

இந்த புகைப்படத்தை இயக்குனர் சரவணன் பகிர்ந்து, "ஒரு மாபெரும் வெற்றியை எளிமையாகக் கொண்டாடுவதுதானே பொருத்தமாக இருக்கும்... விவசாயிகளிடம் கரும்பு வாங்கி, இனிக்க இனிக்க ‘துணிவு’ பொங்கலை இயக்குநர் அ.வினோத்துடன் கொண்டாடிய தருணம்... #Thunivublockbuster" என‌ இயக்குனர் சரவணன் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

H Vinoth Celebrate Blockbuster Thunivu Pongal Sugar Cane

People looking for online information on Ajith Kumar, AK, H Vinoth will find this news story useful.