“சத்தியமா நான் சொல்லுறேன்..” - பிக் பாஸ் 3 டைட்டில் வின்னர் முகெனின் Famous பாடல் விரைவில்..!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 31, 2019 03:38 PM
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இறுதி வரை வலுவான வெற்றியாளராக அறியப்பட்ட முகென் ராவ், டிக்கெட் டூ ஃபினாலே-வில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிப்பெற்றார். அத்துடன் மக்கள் மனதில் இடம்பிடித்த முகென், சுமார் 7 கோடி வாக்குகளை பெற்று பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். முகென் ராவிற்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

மலேசியாவைச் சேர்ந்த முகென் ராவ், பிக் பாஸ் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக இந்தியா வந்து, தமிழக மக்களின் இல்லங்களில் ஒருவராக இன்று அனைவரையும் கவர்ந்திருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது, முகென் செய்யும் சில சில கைவினைப் பொருட்கள், அலங்காரங்கள், பாடல் பாடுவது என்பன மக்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு முன்பாக சூப்பர் சிங்கர் மியூசிக் பேண்ட் உடன் முகென் பாடிய, ‘சத்தியமா நான் சொல்லுறேன் டி’ பாடல் இணையதளங்களில் படு வைரலானது.அவர் எங்கு சென்றாலும் இந்த பாடலை பாட சொல்லி ரசிகர்கள் கேட்கிறார்கள்.
தற்போது இந்த பாடலுக்காக வீடியோ மேக்கிங்கில் முகென் ஈடுபட்டுள்ளாராம். பாடல் ரெக்கார்ட் செய்யும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
“சத்தியமா நான் சொல்லுறேன்..” - பிக் பாஸ் 3 டைட்டில் வின்னர் முகெனின் FAMOUS பாடல் விரைவில்..! வீடியோ