வெறித்தனம் - பிகிலில் தளபதி விஜய் ஸ்டைலில் ஃபுட் பால் விளையாடும் பிக்பாஸ் சாண்டி
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Oct 31, 2019 11:58 AM
அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிருக்கும் படம் 'பிகில்'. பெண்கள் ஃபுட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நடன இயக்குநரும், பிக்பாஸ் 3 போட்டியாளருமான சாண்டி பிகில் படத்தில் தளபதி விஜய் ஸ்டைலில் ஃபுட் பால் விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.
Tags : Bigil, Vijay, Verithanam, Sandy